சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சிறுவனும், அவருடைய அப்பாவும் இணைந்து செய்த செயலைப் பார்த்து அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. வைரலாகும் வீடியோவில், ஒரு சிறுவனுக்கு செருப்பு இல்லாத நிலையில், அவர் மர இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, “அப்பா இதை என் காலில் கட்டுங்கள்” எனக் கேட்ட காட்சி மனதை பிளக்கும் வகையில் உள்ளது.

அப்பா அந்த இலைகளை கம்பிகளைப் பயன்படுத்தி, செருப்பாக உருவாக்குகிறார். இந்த வீடியோவைக் கண்ட பலரும், “நாம தினமும் ப்ராண்டட் செருப்பு இல்லை என்று குறை கூறுகிறோம். ஆனால் இந்தக் குழந்தை இலைகளிலே செருப்பு செய்கிறார்… இது தான் வாழ்க்கை” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவில், சூரியனின் வெப்பத்தில் நடக்க முடியாமல் தவிக்கும் மகனுக்காக, ஒரு அப்பா செய்த தியாகமும், எளிய முயற்சியும் அனைவரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. இதை தொடர்ந்து, வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து, “Inspiration of the Day” என மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஒரு பசுமை இலைச் செருப்பு, ஏழ்மையின் துன்பத்தை மட்டும் அல்ல, அப்பாவின் அன்பும், குழந்தையின் ஆசையும் எடுத்துக்காட்டுகிறது. இது நமக்கென்று இருப்பது எல்லாம் மிகச் சிறப்பானதாக தோன்றும் போதிலும், ஒருவேளை ஒருசிலருக்கு அதே பொருள்கள் கனவாக இருக்கலாம் என்பதையும் இவ்வீடியோ உணர்த்துகிறது.