கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவம், 41 உயிரிழப்புகளால் தமிழகம்  முழுவதும்  கவலையில் ஆழ்த்தியது.

இந்நிலையில், உயிரிழந்த குடும்பங்களை முழுமையாக தத்தெடுக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக, கட்சியின் முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் தங்களது குடும்பத்தின் ஓர் அங்கமாகவே உள்ளனர் என்பதே இந்நிலையில் விஜய் எடுத்துள்ள மனதார்ந்த முடிவின் பின்னணி என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்த 41 குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் விஜய் தன்னிலை ஊக்கத்துடன் ஏற்கவிருப்பதாகவும், குடும்பத்தினரின் எதிர்காலம் பாதுகாப்புடன் அமைய தாங்கள் உறுதி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த குடும்பங்களில் ஒருவனாக விஜய் இருப்பார்; அவர்களின் பாதுகாப்பே எங்களின் கடமை” எனவும் ஆதவ் அர்ஜுனா உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த தீர்மானம், தவெக தரப்பில் இருந்து நேர்மையான பொறுப்புணர்வை வெளிக்கொணர்கிறது என அரசியல் வட்டாரங்களில் பாராட்டப்படுகின்றது