ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகுதியில் வியாழக்கிழமை நடந்த ஒரு கடத்தல் சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1.5 வயதான வன்ஷிகா என்ற சிறுமி, தனது தாய்மாமாவின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை ஹேமந்த் சோனி அவரை தூக்கிச் சென்ற காட்சி சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
झुंझुनूं में ढाई साल की बच्ची का अपहरण…पिता ही निकला आरोपी#RajasthanNews pic.twitter.com/qr9ZF1xCWk
— Mangal Yadav (@MangalyYadav) October 10, 2025
தாய் அகங்க்ஷா சோனி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் செய்த தம்பதியருக்கு திருமண வாழ்கைத் தொடங்கிய சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கணவர் அடிக்கடி தன்னையும், குழந்தையையும் மிரட்டியதாகவும் அகங்க்ஷா கூறியுள்ளார். திருமண வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், குடும்ப வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சம்பவத்தையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜுன்ஜுனு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப்ரஜேஷ் ஜ்யோதி உபாத்யாய் கூறுகையில், “மாண்டியம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை பாதுகாப்பாக மீட்க காவல் அணி முழு அளவில் பணி செய்துவருகிறது,” என்றார்.
