அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் கரூர் சம்பவத்தில் அவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவர் திமுக அரசை நோக்கி பல கேள்விகளை எழுப்பிய நிலையில் விஜய்க்கு ஆதரவாக பேசிய நிலையில் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மீது கை வைத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காதே குரல் கொடுக்கும் என்றனர்.

அதன் பிறகு இபிஎஸ் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் சமீபகாலமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் கொடியோடு வருவதால் விஜயுடன் கூட்டணி வைக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் அந்த கட்சியினரே தமிழக வெற்றி கழகத்தின் கொடியை காட்டியதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் நாமக்கல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பில் கட்சியினர் அனுமதி இல்லாமல் மாற்றுக் கட்சி பிரச்சாரங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இதே போன்று தவெக மாவட்ட செயலாளரும் மாற்று கட்சி கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை பயன்படுத்தக்கூடாது எனவும் கூட்டணி தொடர்பாக தலைமை உறுதி செய்யவில்லை எனவும் அறிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் அதிமுக தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடர்பான வியூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.