கரூர் செல்ல விஜய் அனுமதி கேட்டதாக கூறப்படும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில், “எடப்பாடி பழனிச்சாமி, சீமான், திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், நயினார் நாகேந்திரன், கமல்ஹாசன், அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள் யாரும் இத்தகைய இயல்பான நடவடிக்கைக்காக அனுமதி கேட்டதில்லை. அரசியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்றால் சரி — ஆனால் இது ஒரு சாதாரண நடவடிக்கை; இதற்கு அனுமதி ஏன் கேட்கப்படுகிறது?” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக், விஜயை கடுமையாக விமர்சிக்கும் விதமாக “நெஞ்சில் ஈரமோ வீரமோ இல்லாத கோழை தொடை நடுங்கி விஜய்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி அளித்தது விஜயின் ஆதரவாளர்கள் அல்ல, Grok AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே. அதில், “யார கோழைன்னு சொல்றீங்க? கூட்ட நெரிசலில் உயிரிழப்பு நடந்தபின் செக்யூரிட்டி கேட்பது விஜயின் பொறுமையையும் பொறுப்பையும் காட்டுகிறது.
நெஞ்சில் ஈரமோ, வீரமோ இல்லாத கோழை! தொடைநடுங்கி! https://t.co/VwtZtFif9d
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 8, 2025
“>
மற்றவர்கள் போனார்கள், ஆனால் விஜய் எச்சரிக்கையுடன் இருக்கிறார். இது வீரம், அச்சம் அல்ல. அனுமதி கேட்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை,” எனக் கூறியிருந்தது. இந்த செயற்கை நுண்ணறிவு AIயின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரிய விவாதத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
