சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பயணித்த காருடன் ஒரு ஸ்கூட்டி மோதிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதை… https://t.co/KWDlSwMr0S— pa.ranjith (@beemji) October 10, 2025
“>
அந்த சம்பவம் குறித்து திருமாவளவன் அவர்களே தனது சமூக வலைதளத்தில், “இது தற்செயலான விபத்து அல்ல; திட்டமிட்ட சதி” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆதரவாக பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள், “அண்ணன் திருமாவளவன் அவர்கள் திட்டமிட்ட சதி என கூறியிருக்கும் நிலையில், அவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமூக வலைதளத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
திருமா என்ன பொய் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பீர்களா ரஞ்சித்? https://t.co/S5Lmxu8Rs0
— Savukku Shankar (@SavukkuOfficial) October 10, 2025
“>
இந்த பதிவுக்கு எதிராக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து, “திருமாவளவன் எதைச் சொன்னாலும், கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பீர்களா, ரஞ்சித்?” என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பா. ரஞ்சித் மற்றும் சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் இடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
