தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள், பேனர்கள் அடிக்கடி ஒட்டப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் சமீபத்தில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “டாக்டர் லெஃப்ட் பாண்டி” என அழைக்கப்படும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியின் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் அவர் விஜயுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இடம்பெற்றதுடன், “நாளைய கல்வித்துறை அமைச்சரே, பிறந்தநாள் வாழ்த்துகள்” எனும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இன்னும் ஒரு தேர்தல்கூட சந்திக்கவில்லை, அதற்குள் அமைச்சர் பதவிக்கு போஸ்டிங் கொடுத்தாச்சா?” எனக் கேலி செய்து பதிவிட்டுள்ளனர்.

“>

 

சிலர் இதை தொண்டர்களின் உணர்ச்சி வெளிப்பாடாகக் கருதினாலும், மற்றொருபுறம் அரசியல் அனுபவமின்றி இத்தகைய பதவி குறிப்பு போஸ்டர்கள் வெளியிடப்படுவது தவெக அமைப்பின் கட்டுப்பாட்டின்மையை காட்டுகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனால் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.