திமுகவுக்கு ஆதரவாக பேசுபவர்களையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் “200 ரூபாய்” என கிண்டல் செய்யும் பழக்கம் இணையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. இதன் காரணம் குறித்து தெளிவாக விளக்கும் ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திமுக சார்பில் நடத்தப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிலரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டத்திற்கு 200 குடுப்பதாய் சொல்லி 100 ரூபாய்தான் குடுக்குறாங்க இதுலயும் திமுகவினர் ஊழல்தான் பன்றாங்க🤧#DMKFailsTN#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/65ULKoXpXp
— Arun P (@Arun_p_offcial) October 9, 2025
“>
அந்த பெண்மணி வீடியோவில், “எங்களை கூட்டி வந்து இந்த கூட்டத்துக்கு வந்தால் ரூபாய் 200 தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் வந்த பிறகு ரூபாய் 100 மட்டுமே கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்” என கூறி, தன் கையில் இருந்த 100 ரூபாய் நோட்டைக் காட்டி கிண்டல் செய்வது போல் பேசுகிறார். “200 ரூபாய்” எனும் சொல்லே திமுக ஆதரவாளர்களை கிண்டல் செய்யும் சொற்றொடராக நிலைபெற்றது. அதற்கு இந்தவொரு வீடியோ தான் சாட்சி என கூறி அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
