இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, ஒரு நீண்ட பாம்பு அவளது வாயில் நுழைந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பாம்பு தொண்டைக்குள் சென்றதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பெண்ணின் குடும்பத்தினர் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பல மணிநேரம் போராடியபின், அவளது உடலிலிருந்து பாம்பை அகற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
The snake reportedly entered the woman’s mouth when she was sleeping outside and slithered down her throat. https://t.co/8R6inpyH4o pic.twitter.com/k7DAAUCJv2
— Arojinle (@arojinle1) October 7, 2025
இந்த சம்பவத்துக்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும், சில இணைய பயனர்கள் இந்த வீடியோ உண்மையா அல்லது கற்பனைச் சம்பவமா என்ற கேள்வி எழுப்பி, அதன் நம்பகத்தன்மை குறித்து விவாதிக்கின்றனர். மேலும் சுகாதார நிபுணர்கள் கூறுவதாவது> “இத்தகைய சம்பவங்கள் அரிதாகவே நிகழும். ஆனால் வீடியோக்களை நம்புவதற்கு முன் அவை உண்மையானவை என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்,” என தெரிவித்துள்ளனர்.
