சமூக ஊடகங்களில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சாகசங்களும், போக்குவரத்து விதிகளை மீறும் வீடியோக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சாலை பாதுகாப்பு குறித்து புதிய கவலை எழுந்துள்ளது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்குச் சாட்சியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் ஒரு இளம் ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது காதலனின் மடியில் அமர்ந்து, நகரும் ஸ்கூட்டரை இயக்குவது காணப்படுகிறது. இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததோடு, வாகனத்தில் நம்பர் பிளேட்டும் இல்லை. மேலும், இருவரும் சாலையில் பல இடங்களில் முத்தமிடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியவுடன், உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
किसी के लिए ये अश्लील तो किसी के लिए
अच्छा आइडिया हो सकता है,
पर हमारा मानना है ये पुलिस प्रशासन की नाकामी है,
आखिर कब प्रदेश में कानून का इकबाल कायम होगा,
कांकरे में चलती स्कूटी पर कपल का रोमांस करने का वीडियो आया सामने, @rpsinghraipur@CGVOICE00777 pic.twitter.com/FOLmli4K5I— CG_04 (@CG_wasi) October 8, 2025
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சின்ஹா தெரிவித்ததாவது: “கோட்வாலி காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சாலையில் இப்படிப் பட்ட ஆபத்தான சாகசங்கள் மற்றும் பொது இடங்களில் காதல் காட்சிகள் சமூகத்திற்கு தவறான செய்தியை அளிக்கின்றன. இதுபோன்றவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் கூறினார். மேலும் சாலை பாதுகாப்பு அதிகாரிகள், இளைஞர்கள் சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக உயிர் ஆபத்தில் ஈடுபடாமல், விதிகளை கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
