கோவை விமான நிலையத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு அதிமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தந்த வேளையில், அதே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களும் அந்த வழியாக பயணித்திருந்தார். இதை கவனித்த அதிமுக தொண்டர்கள், “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்க!” என்று முழக்கமிட்டதுடன், உற்சாக கோஷங்களுடன் அவரை வரவேற்றனர். இதனால் அந்த இடம் சில நிமிடங்களுக்கு அரசியல் உற்சாகத்தால் முழங்கியது.

“>

இதற்கிடையில், கரூரில் விஜய் அவர்கள் பாடிய “பத்து ரூபாய்” பாடலை அதிமுக தொண்டர்கள் நையாண்டியாகப் பாடி, செந்தில் பாலாஜி முன்னிலையில் கேலி செய்துள்ளனர். இந்த நிகழ்வை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.