2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம்  மருத்துவத்திற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி மேரி இ. பிரன்கோவ், ஃபிரெட்‌ ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று  2025 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிச அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. மேலும் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. மேலும் இவர்களுக்கு உலோக கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்காக நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாக.