சமூக ஊடகங்களில் அடிக்கடி பல்வேறு வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறுகின்றன. சில வீடியோக்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும், சிலவை அதிர்ச்சி மற்றும் வியப்பை தருகின்றன. தற்போது, அப்படியான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக பாம்புகள் தவளைகள் போன்ற சிறிய உயிரினங்களை வேட்டையாடுவது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது இணையத்தில் பரவியுள்ள இந்த வீடியோவில் ஒரு தவளை பாம்பை வேட்டையாடி விழுங்கும் காட்சி பதிவாகியுள்ளது!
29 வினாடிகள் மட்டுமே நீளமான இந்த வீடியோவில், ஒரு பெரிய தவளை பாம்பை பாதி விழுங்கிய நிலையில் காணப்படுகிறது. பாம்பின் தலைப்பகுதி தவளையின் வயிற்றுக்குள் இருக்க, அதன் வால் பகுதி வெளியே தொங்கிக் காணப்படுகிறது. உயிருடன் இருந்த பாம்பு போராடி தப்பிக்க முயன்றாலும், தவளையின் வலுவான பிடியால் அது முடியாமல் போனது எனக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவை தனது கேமராவில் பதிவு செய்த நபர் அந்த காட்சியை கண்டு ஆச்சரியமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வினோதமான காட்சியை @TheeDarkCircle என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ளார். வெளியான சில மணிநேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
மேலும் வீடியோவைப் பார்த்த பலரும் “இது பயங்கரமாக இருக்கிறது”, “இயற்கையின் அதிசயம் இது”, “இது நம்ப முடியாத காட்சி!” என்று பதிவிட்டுள்ளனர். ஒருவரோ நகைச்சுவையாக, “இந்த தவளையும் ஜிம்மில் சேர்ந்திருக்கிறது போல!” என எழுதியுள்ளார்.
https://t.co/po247i61Tx
