இணையத்தில் பூனைகள் எப்போதும் பிரபலமானவை. அவற்றின் எதிர்பாராத செய்கைகள் காரணமாகவே, பூனைகளின் வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு குழந்தையை கரடி மற்றும் நரி தாக்க முயற்சிக்கும் தருணத்தில் ஒரு பூனை வந்து காப்பாற்றும் காட்சி கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

முதல் பார்வையில் சிசிடிவி காட்சிகளாகத் தோன்றும் அந்த வீடியோ, உண்மையில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாக நிபுணர்கள் விளக்குகின்றனர். பல்வேறு பூனை, கரடி, நரி காட்சிகளை இணைத்து நுணுக்கமாக தொகுத்து உருவாக்கப்பட்ட இந்த காணொளி, யதார்த்தத்தை மிஞ்சும் அளவிற்கு நம்பகமாக இருப்பதால் இணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஒரு உண்மையான சம்பவத்தையும் பலர் நினைவுகூர்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு சிறுமியை நாயின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய ஒரு பூனையின் நிஜ வீடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. மேலும் அந்த காணொளியில், சிறுமியைத் தாக்க வந்த நாயை பூனை தைரியமாக எதிர்த்து விரட்டும் காட்சிகள் பாராட்டைப் பெற்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Sad Cat TV (@sadcattv)