ஒரு பெண் தனது காதலனுடன் சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக ஒரு ரீல் வீடியோ எடுக்க வீட்டின் மாடிக்குச் சென்றார். அவர்கள் வீடியோ எடுக்கத் தொடங்கியபோது, திடீரென பெண்ணின் அம்மா அங்கு வந்துவிட்டார். அம்மா கோபமடைந்து, அவரது மகளை துடைப்பத்தால் அடித்து வெளுக்கிறார். வேறு மாடியில் நின்ற காதலனையும் பெண்ணின் தாய் கையை காட்டி மிரட்டுகிறார். இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரை சிரிக்க வைத்துள்ளது.
लड़की छत पर रील बना रही थी, पड़ोसी छुपकर उसका वीडियो बना रहा था। तभी मां आ गई, और फिर जो हुआ, खुद देख लो।😃😃😃😃 pic.twitter.com/BGYClRqPWT
— ✿ Anu Yadav. ✿ (@Anuyadav845070) October 4, 2025
வீடியோவில், அம்மாவின் கோபமும், துடைப்பத்தால் அடிக்கும் காட்சியும் மக்களுக்கு வேடிக்கையாக இருந்ததால், இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற வீட்டுக்குள் நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பொழுதுபோக்காக பரவுவது வழக்கமாக உள்ளது.
