ஹாங்காங்கில் பரபரப்பான தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவர், ஆணொருவரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 28-ஆம் தேதி காலை 9:30 மணியளவில் காஸ்வே விரிகுடா பகுதியில் உள்ள பேட்டர்சன் தெருவில் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி மற்றும் தகவலின்படி, மோக் என்ற 41 வயதுடைய சீன யூடியூபர் ஒருவர், அந்தப் பெண்ணை தனது “காதலியாக இருக்க” கட்டாயப்படுத்த முயற்சி செய்துள்ளார். அவர் அந்தப் பெண்ணை பின்னால் இருந்து பிடித்து, தெருவில் சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண், தப்பிக்க முயன்றும் முடியாத நிலையில் இருந்தார்.
View this post on Instagram
சம்பவத்தை பார்த்த சில வழிப்போக்கர்கள் உடனடியாக தலையிட்டு, பெண்ணை மீட்க முயன்றனர். அவர்களது உதவியினால் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டார். பின்னர், அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மோக்கை கைது செய்தனர். காணொளியில் மோக், பெண்ணை பிடித்துக் கொண்டு, “என் காதலியாக இரு; நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்” என்று கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், “எனக்கு உன்னைத் தெரியாது!” என சத்தமாக கத்துகிறார். சம்பவத்தின் போது அந்தப் பெண் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று கொண்டிருந்ததாக கூறுகிறார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
