சீன நாட்டில் உள்ள சிச்சுவான் பகுதியில் ஒரு குழு மலையேறிக் கொண்டிருந்தது. அவர்கள் சுமார் 18,300 அடி உச்சிக்கு பனி சிகரத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மலையேறும் குழுவில் இருந்த ஒருவர் பாதுகாப்பு கயிறை அவிழ்த்து விட்டு செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். இதில் அவர் கீழே தவறி விழுந்தார். சுமார் 200 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரத்தில் அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் உதவி செய்ய முடியவில்லை.
இந்த சம்பவத்தில் இறந்தவர் 31 வயதான ஹாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையில் இவர்களது குழு எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இங்கு மலை ஏற வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Terrifying Footage Shows Tourist Sliding To His Death After Taking A Selfie On Mount Nama Feng In Sichuan, 🇨🇳
He reportedly unclipped his safety harness to take a picture, but slipped on the ice and was sent plummeting into the abyss – to the horror of fellow climbers. pic.twitter.com/Z4Wa5esHlT
— sanjay patel (@Sanjaypatel12Dr) October 3, 2025
