ராஜஸ்தானின் ஒரு மித்ஷ்தான் பண்டாரத்தில் நடந்த கோர சம்பவம், தற்போது சமூக வலைதளங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண் கடையின் கெளண்டரின் அருகில் சென்றபோது, அந்த இடத்தில் இருந்த ஒரு இளைஞர் அவரை தவறான முறையில் தொட்டார்.
“राजस्थान मिष्ठान भंडार” पर “गौतम” नाम के एक शख़्स ने महिला को गलत तरीके से छू लिया। महिला ने तुरंत शिकायत की — और उसके बाद जनता ने उस शख़्स का इलाज कर दिया 😐 pic.twitter.com/35CdoppHNk
— 𝙼𝚛 𝚃𝚢𝚊𝚐𝚒 (@mktyaggi) October 6, 2025
அதைக்கண்ட பெண் உடனடியாக சத்தம் போட்டதும், அருகிலிருந்த பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தில் குற்றவாளியை பிடித்து, வெறித்தனமாக அடித்தனர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த நபர் மீது பொதுமக்கள் செய்த தாக்குதல் வீடியோவில் தெளிவாக காட்சியளிக்கிறது. சிலர், அந்த நபரின் மரியாதையற்ற செயலைக் கண்டித்து, அவரை அடித்ததை நியாயமாக கருதுகின்றனர். விசாரணையில் அந்த நபர் மதுபானம் குடித்திருந்தது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் அவனை அடிக்காத இடமே இல்லை. பெண்கள் இருக்கும் ஏரியாவில் இப்படி நடப்பது தவிர்க்கவேண்டிய விஷயம் என்ற உணர்வோடு மக்கள் தீவிரமாக நடந்தனர். இந்நிலையில், அந்த நபரின் பெயர் கௌதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள், “இது தான் நேரடி நீதிமன்றம்”, “சிலருக்கு சட்டத்தை காட்டணும்னா அடிச்சு தான் காட்டணும். அப்போ தான் புரியும்” என கருத்து தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும், இதுவரை காவல்துறையில் அதிகாரப்பூர்வ புகார் தரப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால், இந்த சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மீதான புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது.
