கரூர் துயர சம்பவம் குறித்து இதுவரை தவெக தலைவர் விஜய் அவர்கள் எந்த வகையிலும் நேரடியாக இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகும், அவர் வெளியிட்ட காணொளிகளில் கூட அந்த உயிரிழந்தோருக்கான தனிப்பட்ட இரங்கல் எதுவும் தெரிவிக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, சமூக ஊடகங்களில் விஜயின் மவுனம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், “தொண்டர்களுக்காக நான் எப்போதும் இருப்பேன்” என அவர் பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய், “உங்க கூட நிற்க, உங்களுக்காக நிற்க, உறுதியா நிக்க, உங்க கூட பேச, உங்களுக்காக பேச, உண்மையா பேச, உணர்வோட பேச, உறுதியாக பேச, உங்களுக்காக சேவை செய்ய — உங்க விஜய், நான் வரேன்!” எனக் கூறியிருப்பார். இதை கிண்டல் அடிக்கும் விதமாக நெட்டிசன்கள், “சாரே அப்படி சொன்னீங்களே ,சொன்னீங்களே சாரே  இப்ப எங்க போனீங்க?” என மீம்ஸ் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக வைரலாகி, அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.