2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவத்திற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி மேரி இ. பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் இதேபோன்று பிற துறைகளுக்கும் விரைவில் நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
