கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்தையொட்டி, நெடுஞ்சாலை பகுதிகளில் எந்தவிதமான அரசியல் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளும் நடத்தக்கூடாது என ஐகோர்ட் தடைவிதித்தது.

இந்த தடையைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) நாளை (அக்.5) குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோட்டில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனை அடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதிகளை பெற்று வரும் அக்டோபர் 8ஆம் தேதி குறித்த இடங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் செயல்பட விரும்புவதாகவும், பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பையும் முன்னிலைப் படுத்தும் வகையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.