நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரமான சாலை விபத்து குறித்து சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று, பாதையை மாற்றும் முயற்சியில் நேரடியாக லாரியுடன் மோதி மிகவும் கடுமையான விபத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், பின்னால் வந்த மற்றொரு வாகனமும் அதே காரின் மீது மோதியது.
இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்ட விபத்து காரை துண்டு துண்டாக நொறுங்க வைத்தது. சம்பவத்தில் உள்ளே பயணம் செய்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் தெரிகின்றன. அந்த நேரத்தில் ஒரு கார் ஓட்டுநர், எதிர்பாராத வகையில் பாதையை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அப்போதே அந்த பாதையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றை அவர் கவனிக்கவில்லை. கார் நேரடியாக லாரியில் மோத, பின்னால் வந்த மற்றொரு வாகனமும் அதே காரின் மீது மோதுகிறது.
हाइवे पर छोटी सी ग़लती , मौत का कारण बन जाती हैं।।👇
इतनी जल्दी क्यों होती लोगों को जाने के लिए ??
इसमें ट्रक वालों की क्या गलती है ?? pic.twitter.com/QQZgnbCOwb
— पूजा (@poojaofficial5) October 1, 2025
இந்த 11 வினாடிகளுக்குள் நிகழ்ந்த கோர சம்பவத்தின் வீடியோ, சமூக ஊடகங்களில் @poojaofficial5 என்ற கணக்கில் பகிரப்பட்டு உள்ளது. “நெடுஞ்சாலையில் ஒரு சிறிய தவறு கூட மரணத்திற்கு வழிவகுக்கும். மக்கள் ஏன் அவசரமாக ஓடுகிறார்கள்? இதற்கு லாரி ஓட்டுநர்களின் தவறா?” என கேள்வியெழுப்பும் செய்தியுடன் அது வெளியிடப்பட்டது. மேலும் 23,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்ட இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துகளையும் வருத்தங்களையும் பகிர்ந்துள்ளனர்.
