வட மாநிலங்களில் நவராத்திரி விழா முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்நாத் கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் ‘கன்யா பூஜை’ சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜையின் போது, 2 முதல் 10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகள் துர்க்கையின் உருவமாக கருதப்பட்டு, அவர்களின் பாதங்கள் கழுவி, பூஜை செய்யும் மரபு பின்பற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பங்கேற்றார். அவர், 20-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பாதங்களை தனிப்பட்ட முறையில் கழுவி, அவர்களுக்கு பூஜை செய்து, பின் அன்னதானமும் வழங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
