மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஏற்கனவே இந்த வருடத்தில் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர்.
இந்த அகவிலைப்படி உயர்வானது அரசு ஊழியர்களுக்கு பண வீக்கத்தின் தாக்கத்தை சரி செய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் இதன் காரணமாக இனி அரசு ஊழியர்கள் 58 சதவீத அகவிலைப்படியை பெறுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியானது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
