ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து பெற்ற பிறகு பணம் வழங்க மறுத்த ஆசிரியை ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் டெல்லி நரேலா பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன காலத்தில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது ஒரு பரவலான நடைமுறையாகி விட்ட நிலையில், உணவுகளை நேரத்திற்கு முன்பாக டெலிவரி செய்ய உணவு பகிர்மான பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அவமதிப்பும், அடிக்கடி ஏற்பட்ட அனாகரிகங்களும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், நரேலா பகுதியைச் சேர்ந்த ரிஷி என்ற ஆசிரியை, கடந்த 30-ம் தேதி இரவு, குடிபோதையில் இருந்த நிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுக்கான பணம் வழங்க மறுத்துள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த ஊழியரிடம் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
नरेला मे zometo से ऑर्डर कैंसिल किया तो zometo वाले ने बुलाई पुलिस और फिर सब आपके सामने है कैसे घर से पिटते हुए युवक को ले गई थाने @dcp_outernorth @CPDelhi @DelhiPolice pic.twitter.com/UGiMQwBFQC
— Raajesh Khatri (@KhatriRajeesh) October 1, 2025
திடுக்கிட்ட உணவு டெலிவரி ஊழியர் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரிஷியை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் மீண்டும் போலீசரிடமும் அமரியாதையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வலுக்கட்டாயமாக அவரை காவல்நிலைக்குக் கொண்டு சென்ற போலீசார், அங்கு அவர் உணவுக்கான பணத்தை வழங்க செய்தனர். பின்னர், அவருக்கு உரிய அறிவுரை வழங்கி, எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் சம்பந்தமாக, உணவு டெலிவரி ஊழியர் போலீசில் தனிப்பட்ட புகார் அளிக்க மறுத்ததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
