அம்யூஸ்மென்ட் பார்க்கில் மகிழ்ச்சியுடன் விளையாட வருபவர்கள், பாதுகாப்பை முதன்மைப்படுத்தி விளையாடி திரும்ப வேண்டும். ஆனால், புதிய முயற்சி என்ற பெயரில் ஆபத்தான செயல்களைச் செய்து சிக்கிக் கொள்ளக் கூடாது. இத்தகைய ஒரு சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளி காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு அம்யூஸ்மென்ட் பார்க்கின் தண்ணீர் சறுக்கல் ஓட்டத்தில், மூன்று நபர்கள் டியூப் மூலம் சரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்களில் ஒருவர் உயரமான விளிம்பைப் பிடித்து, வித்தியாசமான ஸ்டண்ட் செய்ய முயன்றார். ஆனால், மீண்டும் சரியும் போது, எதிர்பாராத வகையில் அவர் திசை மாறி சறுக்கலில் மோதிவிட அவருக்கு விலா எலும்பில் கடுமையான அடி ஏற்பட்டு, விபத்து நிகழ்ந்தது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி, பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது, விளையாட்டின் போது விதிகளை மீறி செய்யும் முயற்சிகள் எவ்வாறு ஆபத்தமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது. பார்க்கில் உள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என, இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.