இப்போது சமூக வலைதளங்களில் எதையாவது திறந்தாலே வித்தியாசமான காணொளிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாக காட்டுயானைகள், புலிகள் போன்ற விலங்குகளை பார்த்தாலே மக்கள் அஞ்சி செயல் இழந்து விடுகிறார்கள்.

 

ஆனால் இங்கே, ஒரு சிறுத்தையை கண்ட போதும் ஒருவன் தைரியமாக எதிர்கொண்டு அதை கட்டிப் பிடித்துள்ளார். இந்த காணொளி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு சிறுத்தை அதன் காலில் கயிறு கட்டப்பட்டு, மேலே துணி போடப்பட்ட நிலையில் இருக்கிறது. இது ஒரு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையாக கூறப்படுகிறது.

அந்த சிறுத்தையை கட்டிப் பிடித்ததற்குப் பின்னால், ஒரு பெண்ணின் துணிச்சல் இருக்கிறதா அல்லது வேறு யாரோ தைரியசாலி ஒருவர் இருக்கிறாரா என்ற விவரம் தெளிவாக இல்லை. ஆனால், காட்டு உயிரினத்தை நேரில் சந்தித்து கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே.

இதைத்தான் பலரும் பாராட்டி வரும் நிலையில், “இந்த மனிதரின் தைரியம் கைதட்ட வேண்டிய ஒன்று” என கமெண்ட்களில் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இடம், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், இந்த வீடியோவை @HasnaZaruriHai என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்ததிலிருந்து அது வேகமாக பரவி வருகிறது.

சிலர் இது ஒரு ஆச்சரியமான சம்பவம் என சொல்வதுடன், சிலர் “இது வனத்துறை வேலை, பொதுமக்கள் இதுபோன்று முயலக்கூடாது” எனவும் எச்சரிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக, இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.