சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் வியக்கவைக்கும் வீடியோக்கள் பரவி கொண்டே வருகின்றன. அதுபோல தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ஒரு பெண் தாய்லாந்தில் உள்ள ஒரு சந்தையை கேமராவில் காண்பிக்க, அங்கு விற்கப்படும் பொருட்கள் எதிர்பார்க்க முடியாத வகையில் உள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Sanjhalika Shokeen (@sanjhalika)

சாதாரணமாக காய்கறிகள், மீன், கோழி ஆகியவை விற்கப்படும் இடத்தில், முதலைகள் தான் இங்கு முக்கியமாக விற்கப்படுகின்றன. வீடியோவில், அந்த பெண் மிக அதிர்ச்சியுடன் அந்த சந்தையை சுற்றி காண்பிக்கிறார். அங்கு சில கடைகளில் முதலையின் தலைகள் மேசைகளில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ளன.

அந்த பெண் கூறுவதன் படி, அந்த முதலைகளின் உடல்களை மக்கள் சாப்பிட்டு விட்டுப் பின், அதன் தலைகளை அப்படியே வைக்கிறார்கள். இதை தாண்டி, கடைகளில் முதலையின் பற்கள் கூட விற்கப்படுவதை காண முடிகிறது. அந்த சந்தையின் இயல்பான காட்சி போலவே, அந்த பெண்ணின் பயமும், வியப்பும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதலைகளை சாப்பிடும் பழக்கம் உள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு கலாசாரம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. பலர் இதை மனிதாபிமான ரீதியாக விமர்சித்தும் வருகின்றனர், மற்றொருபுறம் சிலர் இது அந்த நாட்டின் கலாசாரம் எனக் கருத்து கூறுகின்றனர்.