கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலைக்குப் பிறகு, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் அடைக்கலம் கொண்டிருந்த விஜய், சுமார் 34 மணி நேரமாக இருந்த அமைதியை முடித்து, இன்று காலை தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் அவசரமாக வெளியேறினார். அவர் எந்த இடத்திற்கு சென்றுள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நோக்கில் விஜய் கரூர் செல்லலாம் என தவெக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கரூரில் போலீசாரின் அனுமதியுடன் விஜயின் பயணம் குறித்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வேகமாக பரவிக் கொண்டும், பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.