சமீபத்தில் ரெடிட் என்ற சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, பார்ப்போரை செம ஷாக்கில் ஆழ்த்தியிருக்கிறது. பெயர் குறிப்பிடாத ஒருவர் தனது குளியலறையில் சுவற்றுக்குள் ஒரு  இருப்பதை நேரில் கண்ட அதிர்ச்சியை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு ஷவர் நாப் மெதுவாக சுழன்று சுவற்றிலிருந்து புறப்பட்டு வரும் ஒரு நரைமுடியுள்ள, நெட்டையான விரல்கள் கொண்ட கரத்தை காணலாம். அந்த கை, சுவற்றில் இருந்து வெளியே வந்து ஏதாவது தேடிக் கொண்டு இருக்கும் காட்சிகள் உண்மையில்  போலவே இருந்தது.

Call the exorcist
byu/rapatakaz inScary

சில விநாடிகள் அந்த மர்ம கை சுவர் வழியாகத் தேடி பார்த்தபின், எதையும் பிடிக்க முடியாமலே மீண்டும் உள்ளே மறைந்தது. வீடியோவில் இதைப் பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனமாக பதிலளித்து, “இந்த வீட்டுக்கு தேவாலயத்திலிருந்து எக்சார்ஸிஸ்ட்-ஐ கூப்பிடணும் போல இருக்கு!” என நையாண்டி அடித்தனர். வீடியோவுடன் “Call the exorcist” என்ற வாசகமும் இடப்பட்டுள்ளது. இதைக் கண்டவர்கள், சுவருக்குள் பிசாசா, விலங்கா, இல்லன்னா ஏதாவது புதுமையான பிராணியா என்ற சந்தேகத்தில் குழம்பி உள்ளனர்.