நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே. எஸ். திரையரங்கம் அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பேசினார்.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “ஒரு மனிதனுக்கு நல்ல உணவு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர், மருத்துவ வசதி, சாலை வசதிகள் ஆகியவை அடிப்படை உரிமைகள். இவைகளைச் சரியாக செய்கிறோம் என்றே நான் கூறுவேன். ஆனால், அதற்கும் மேலாக பொய் கூறி மக்களை ஏமாற்ற மாட்டோம்” என தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த விஜய், “அவர்கள் போல நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. அடிப்படையான விசயங்களில் எந்தஒரு சமரசம் இருப்பதில்லை..
ஆனால், நாங்கள் எதையும் சிறந்த முறையில் செய்வோம் என உறுதியாக கூறுகிறோம். தேர்தல் வெற்றிக்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எங்கள் கட்சியின் பண்பல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
