மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட அந்த பெண் பிரேக்கப் செய்துவிட்டார். இந்த பிரேக்கப்-ஐ ராஜேந்திரவால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அவர் தொந்தரவு கொடுத்து வந்தார். அந்த பெண் காதலை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில் சம்பவ நாளில் தன்னுடைய ஸ்கூட்டியில் ராஜேந்திரா வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தன்னுடைய காதலி மீது அவர் பைக்கால் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து உதவி செய்வதோடு அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் ராஜேந்திரா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.