திருமண நாள் என்பது எல்லோருக்கும் நினைவில் நிலைக்கும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ ஒன்று, ஒரு மணவிழாவை பரபரப்பாக மாற்றியுள்ளது. ஒன்றுக்கொன்று பொருந்தாத உண்மை இந்த வீடியோவில் வெளியாகியுள்ளது. மணமகனுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட ஒரு கட்டிலின் உள்ளே, அவர் காதலன் ஒருவன் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 24, 2025
வீடியோவில் காணப்படும் அதிர்ச்சிமிக்க தருணங்களில், அந்த நபர் கட்டிலின் பெட்டிக்குள் சிக்கியிருப்பதும், சுற்றியுள்ளவர்கள் அதில் எப்படிப் பதறுகிறார்கள் என்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து விழாவில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உடனே அந்த நபரிடம் மோதலுக்கும் சென்றனர்.
இதுகுறித்து மக்கள், “எப்படி இதெல்லாம் திட்டமிடப்பட்டது?”, “யாரும் கவனிக்கலையா?” என்பது போன்ற கேள்விகளுடன் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியவுடன், நெட்டிசன்கள் மீம்களும் ஜோக்களும் உருவாக்க துவங்கினர்.
“Buy One, Get One Free!”, “அந்தப் பையன் எப்படி மூச்சு விட்டான்?” போன்ற கலகலப்பான கருத்துகள் பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றன. ஆனால் இந்த சிரிப்புக்கு பின்னால், வேதனையும் உள்ளது .
