இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டத்தில், போட்டி முடிவுகளைவிட அதன் பின்னணியில் நிகழ்ந்த சம்பவங்கள் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய ரசிகர்கள் கேலி செய்யும் விதமாக, போர்விமான விபத்தை குறிக்கும் வகையில் சைகை செய்ததுதான் சம்பவங்களுக்கு துவக்கமாக அமைந்தது.
இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி நேரடியாக ஆதரித்து, சமூக வலைதளங்களில் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் வீடியோவை அந்த சைகைக்கு ஒப்பிட்டு பதிவிட்டதால், விளையாட்டில் அரசியல் பரிமாணமே ஏற்பட்டு விட்டது.
PCB chairman Moshin Naqvi’s latest X Post. pic.twitter.com/lRKddUdsDP
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 24, 2025
“>
இந்தச் சைகை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய எல்லைப் பதற்றங்கள் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் ஏற்பட்ட ஆபரேஷன் சிந்தூர் சம்பவத்தோடு இணைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவூப்பின் இந்த நடவடிக்கையை X-இல் நேரடியாக ஆதரித்த நக்வியின் செயல், ஒரு விளையாட்டு நிர்வாகி செய்யக் கூடிய செயல் அல்ல என விமர்சிக்கப்படுகிறது.
2022 T20 உலகக் கோப்பை நினைவுகூர்ந்த இந்திய ரசிகர்கள், “கோலி கோலி” என ஹாரிஸை கேலி செய்ததையடுத்து அவர் முதலில் காதை துலக்கி பதிலளித்ததோடு, பின்னர் சஞ்சு சாம்சனை அவுட் செய்த பிறகு ‘ஜெட்-ஃ விபத்து சைகையை இரண்டு முறை காட்டியதால் மைதானம் தவிர அரசியல் மேடைகளிலும் இது விவாதிக்கப்பட ஆரம்பித்தது.
இந்நிலையில், இந்திய அணியின் பதிலடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஜோடியான தொடக்க வீரர்கள் சேர்த்த 105 ரன்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர். பின், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் ரசிகர்களை நோக்கி சிரித்து சைகை செய்த சம்பவம், முடிவடையும் தருணத்தில் நெருப்பை மேலும் தூண்டியது.
ஆனால், அனைத்து செயல்களையும் மனதில் கொள்ளாமல் , இந்தியா தனது கவனத்தை ஆட்டத்தில் வைத்துக்கொண்டு, நேற்று வங்கதேசத்தை வென்ற பிறகு தோல்வியின்றி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முதன்முறையாகத் தகுதி பெற்ற அணியாக பெருமை பெற்றது.
