பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன. இந்த சூழலில் ஆசியக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் மோதியது. இதில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “நீங்கள் விளையாட முடிவு செய்திருந்தால், பாகிஸ்தானைப் பற்றி இவ்வளவு யோசித்து இருந்தால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த போட்டியில் கலந்துகொள்ளவே கூடாது.
ஆனால் போட்டியில் விளையாட முடிவு செய்துவிட்டோம் என்றால், விளையாட்டுத்திறனை உறுதி செய்யும் விதமாக நாகரிகமாக நடந்து, அவர்களுடன் கைகுலுக்க வேண்டியதுதான் சரியான நடைமுறையாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் காலத்தையும் எடுத்துக்காட்டிய சசி தரூர்
தொடர்ந்து அவர் கூறியதாவது, “1999-ல் கார்கில் போரின் போது, இந்திய வீரர்கள் போர்க்களத்தில் உயிர்நீத்த நாளிலேயே, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தது.
#WATCH | “I personally feel that once the decision had been made to play, if we feel so strongly about Pakistan, we should not have played…But if we are going to play them, we should play in the spirit of a game, and we should have shaken their hands…We have done this before… pic.twitter.com/6luy8Gyt6i
— ANI (@ANI) September 25, 2025
“>
அப்போது கூட, நமது வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கினர். காரணம், விளையாட்டுத் துறையில் நடக்கும் போட்டி என்பது இரு நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ நிலைப்பாடுகளுடன் இணைக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நாகரிகமான அணுகுமுறை என அவர் வலியுறுத்தினார்.
