தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உயிரிழந்தது திரைத்துறையையே உலுக்கியது.

மகனின் இழப்பால் பாரதிராஜா ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிய நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடமும், சினிமா உலகத்தினரிடமும் எழுந்தது.

இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயராஜ், “மகன் மரணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு பாரதிராஜா, சகோதரரின் மகள் வீடான மலேசியாவுக்கு சென்று தங்கினார். ஆனால் அவர் மனோஜை மறக்க முடியாமல், எப்போதும் அதே நினைவுடன் இருந்தார். தற்போது தான் அவர் மீண்டும் ஊர் திரும்பியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். மகனின் இழப்பை இன்னும் மறக்க முடியாத நிலையில் வாழ்ந்து வரும் பாரதிராஜா என்று கூறினார்.