மத்திய பிரதேசத்தின் குவாலியரில் வசிக்கும் 22 வயது மாலதி பம்ரௌலியா என்பவர், காளி அம்மனின்  வேடத்தில் அநாகரிகமான காணொளி பாடலில் நடனமாடிய வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதும், அது பரவலாகப் பரவி பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

இந்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, பாரதீய கிசான் யூனியன் அடல் சார்பில் பிரியான்ஷு சௌஹான் என்பவரால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பிறகு, தனது செயலுக்காக மன்னிப்பு கோர்ந்து, அந்த வீடியோவை நீக்கியுள்ளார் இளம் பெண்.

 

View this post on Instagram

 

A post shared by The Khabar Daily (@thekhabardaily)

இந்த வீடியோவைத் தயாரிக்கும் போது, காளி அம்மனின்  ஒரு பாடலைப் படமாக்க விரும்பியதாகவும், தவறுதலாக அந்த பாடலைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ள மாலதி.

அவரது நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல என்கிறார். அவர் தானே காளியின் பக்தை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் வலியுறுத்துகிறார்.

“என்னிடமிருந்து ஒரு தவறு நடந்துவிட்டது… அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியுள்ளார். செப்டம்பர் 21 அன்று பதிவிடப்பட்ட இந்த ரீல், வைரலானதும் இந்து அமைப்புகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. போலீஸ் துறை புகாரைப் பெற்றுக்கொண்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளது.