தமிழக அரசியலில் நேர்மையும், எழுச்சியும் கொண்டு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் K.அண்ணாமலையின் புகழ் தற்போது புதிய பருவத்தை தொடந்துள்ளது. எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம், ஆணைப்பள்ளம்  பக்கநாடு பகுதியில், அவருக்கு அங்குள்ள ஆதரவாளர்கள் சார்பாக ரசிகர் மன்றம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இது, சினிமா பிரபலங்களுக்கு பெரும்பாலும் அமைக்கப்படும் ரசிகர் மன்றங்களை மிஞ்சும் வகையில் அரசியல் தலைவருக்காக உருவானது என்பதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“நேர்மை – புரட்சி – எழுச்சி” என்ற வாசகத்துடன், இந்த ரசிகர் மன்றத்தின் பதாகைகள் மற்றும் போர்டுகள் அந்த பகுதியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. “தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் K.அண்ணாமலை (Ex.IPS)” என பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அமைப்பின் தலைவர் A.T.தங்கமணி என்பவராக இருப்பதோடு, இயக்குநர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக பொறுப்பாளர்களின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அண்ணாமலை, தனது நேர்மையான ஆளுமையும், மக்களிடையே நேரடி உரையாடலை வலுப்படுத்தும் செயல்பாடுகளாலும் கடந்த காலங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றவர். 2023-ம் ஆண்டு அவர் மேற்கொண்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை, 105 நாட்களில் 234 தொகுதிகள் வழியாக நடைபெற்றது. இதன் மூலம் பாஜகவிற்கு பல்வேறு பகுதிகளில் ஓர் அடித்தள வலிமை உருவானது எனக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், அண்ணாமலையின் அரசியல் பிம்பம் தமிழகத்தில்தான் மாறாத நிலையில், இவ்வாறு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டிருப்பது அவரது புகழும், மீண்டும் அரசியலில் அதிகபட்ச பொறுப்புக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் வெகுவாக உள்ளதை உறுதி செய்கிறது. மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற செய்திகள் பாஜக வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில், அண்ணாமலையை மையமாக கொண்டு உருவாகும் இந்த வகை இயக்கங்கள், தமிழ் மாநில அரசியலில் பாஜக வளர்ச்சிக்கு புது முகமாக அமையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். “வாக்குகளை வெல்ல முடியாமலே மக்கள் மனதை வென்றவர் அண்ணாமலை” என்ற பேச்சு தற்போது பொதுமக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.