மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் மக்வானா என்ற இளைஞர் மூன்று இளம்பெண்களை தனது காதல் வலையில் சிக்கவைத்து, ஒரே நேரத்தில் மூவருடனும் காதல் உறவு வைத்திருந்தார். மூவரையும் வெவ்வேறு நேரங்களிலும் இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், அவனது இந்த காதல் மோசடி அம்பலமாகிவிட்டது. இந்த விவகாரம் முழுவதும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, காவல்துறை ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து, குஜராத்தின் மோர்பி பகுதியில் இருந்து அவனை கைது செய்தது.

ஆகாஷ் மூன்று பெண்களுடனான நெருக்கமான தருணங்களை வீடியோவாக பதிவு செய்து, அந்த ஆபாச வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டத் தொடங்கினார். இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என, பெண்களை பயமுறுத்தினான். இதனால் பயந்து போன பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆகாஷ் கைது செய்யப்பட்டான். புகாரை அடுத்து, காவல் நிலையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆகாஷ் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

தொழில்நுட்ப தடயங்களைப் பயன்படுத்தி, காவல்துறை அவனை குஜராத்தின் மோர்பியில் கைது செய்தது. தார் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விஜய் டாவர், ஆகாஷ் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ மற்றும் பிற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார்.