திரைப்பட நடிகர் விஜய் மீது, ‘புலி’ திரைப்படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரித் துறையில் முறையாக வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்தால், அமலாக்கத்துறை (ED) ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.

இதை எதிர்த்து நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அமலாக்கத்துறையின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் முன்பே பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்று (செப்.23) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, விஜய் தரப்பில் “2019ம் ஆண்டு பிறப்பிக்க  வேண்டிய அபராத உத்தரவை, 2022ம் ஆண்டில் பிறப்பித்துள்ளனர். இதனால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதமிடப்பட்டது.

விசாரணையை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து, பின்னர் விசாரிக்க உத்தரவிட்டது.