கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்துக்கு, ஓர் அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் கார் ஓட்டுநர் ஒருவர் இடையூறு ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது, அந்த கார், பேருந்தை தொடர்ந்தும் வழிமறித்து சென்றதோடு மட்டுமின்றி, முன்பாக சென்று சாலையில் நின்று பேருந்தை முந்திச் செல்ல விடாமலும், பலநேரம் தடுத்து நிறுத்தியும் காரை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி: வடசேரியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள அரசுப் பேருந்தை, கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை முந்திச் செல்ல விடாமல், வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக… pic.twitter.com/AyVwdqzUIB
— PttvOnlinenews (@PttvNewsX) September 23, 2025
“>
இதனால், பேருந்தில் பயணம் செய்திருந்த பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதோடு, வாகன நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களின் புகாரின் பேரில், கார் எண்ணை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், பொதுமக்களிடையே ஆத்திரத்தையும், பாதிக்கப்பட்ட பயணிகளிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
