வனவிலங்குகள் என்றாலே அவை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் தன்மை கொண்டவை. புலி, சிங்கம், கரடி போன்ற நிலவாழ் மிருகங்களும், முதலை, சுறா போன்ற நீரில் வாழும் விலங்குகளும் உயிர்களை இரையாகி நொடிகளில் விழுங்கும் விலங்குகளாகும். இவை அனைத்தும் மிக அதிக ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.
View this post on Instagram
இந்நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வாலிபர் ஒருவர் ஆற்றில் படகில் பயணம் செய்யும் போது, எதிரே வந்த பெரிய கருப்பு நிற முதலை ஒன்றை பார்த்தும், அதனை அச்சமின்றி அணுகி அதன் வாய் பகுதியில் நேராக முத்தமிடுகிறார். இது மட்டுமின்றி, வெள்ளை நிற இனிப்புகளை அதற்கு கொடுத்து அமைதியாக்கி, அதன் வாய், வால் மற்றும் கால்களை துணிவுடன் பிடித்து விடுகிறார். அந்த முதலை மசாஜ் செய்யப்படுவது போல் அமைதியாக இருந்து விடுகிறது.
இந்த திகில் தரும் காட்சி பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதும், அது வைரலாகி, 2.28 லட்சம் பேருக்கு மேலானோர் லைக் செய்துள்ளனர். ஆனால், இந்த செயல் ஆபத்தானது என்றும், இதுபோன்ற செயலை யாரும் பின்பற்றக் கூடாது என்றும் பலர் சமூக வலைதளங்களில் கடுமையாக எச்சரிக்கின்றனர். “விலங்குகளுடன் விளையாட வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளனர்.
