மும்பை கோரேகாவ் மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளியில், 4 வயது குழந்தை பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், பள்ளியின் 40 வயது பெண் உதவியாளர் கைது செய்யப்பட்டு, டின்தோஷி நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தால் அக்டோபர் 1 வரை நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தை கிண்டர்கார்டனில் கல்வி பயின்று வருகிறார். கடந்த 15 நாட்களாக சிறுமி, உடலில் வலியுள்ளதாக தனது குடும்பத்தினரிடம் புகார் கூறியதுடன், அம்மா தொட நெருங்கினால் கூட மறுத்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதி, குழந்தையின் அம்மாவிடம், “ஸ்கூலில் அந்த அம்மா என்னை அங்க தொட்டாங்க… வலி இருக்கு” என்று கூறியவுடன், தாயார் உடனே பள்ளியில் சென்று பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கோரேகாவ் போலீசில் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையைத் தொடங்க, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, 16ம் தேதி சந்தேகப்படும் பெண் ஊழியரை கைது செய்தனர். இருவரும் பின்னர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.