தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது தனது உறுப்பினர்களுக்காக இரண்டு முக்கிய புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்புக் விவரங்களை விரைவாக அறிய Passbook Lite எனும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை உடனுக்குடன் பார்க்க முடியும். பழைய முறையை விட இது மிகவும் எளிமையானது என்றும், போதுமான நேரத்தை மிச்சப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வேலையை மாற்றும் போது பெரும்பாலும் தேவையாக இருக்கும் Annexure K ஆவணத்தையும் தற்போது ஆன்லைனில் நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்த ஆவணத்தை பெற பல்வேறு நிலைகளில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது, ஒரு கிளிக் மூலம் இதை டவுன்லோட் செய்ய முடியும் என்பது EPFO உறுப்பினர்களுக்கு பெரும் நன்மையாகும்.
இவை இரண்டும் பிஎஃப் தொடர்பான செயல்முறைகளை மிக எளிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. EPFO போர்ட்டலில் ஒரே லாகின் மூலம், பாஸ்புக், கிளைம் ஸ்டேட்டஸ், Annexure K போன்ற அனைத்தையும் பார்க்க முடியும். வேலை மாறும் பணியாளர்களுக்காக இது ஒரு நேரத்தையும் சேமிக்கும், நம்பிக்கையையும் உருவாக்கும் தீர்வாக இருக்கிறது.
