‘விஜய்  டிவி’யில் ஒளிபரப்பான ‘பல காமெடி  நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்த பாலா, தற்போது ‘காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமூகநலத்தையும் முக்கியமாகக் கருதும் இவர், ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவதால் பாராட்டுகள் கிடைத்துள்ளன. அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் அவரை குற்றம் சுமத்தும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக, “பாலா ஒரு சர்வதேச கைக்கூலி” என்றும், “அவர் வழங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலி” என்றும் சிலர் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

“>

 

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த பாலா, “நான் சர்வதேச கைக்கூலி என்றால் என்னவென்று கூட தெரியாது. நிஜமாகவே இது எனக்கு அதிர்ச்சி. நான் ஒரு சாதாரணமான ஆள். மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சொந்தமாக பணம் செலவழித்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கிறேன்.

அதன் பதிவு எண் எனது பெயரில் இருக்கக் கூடாது என்பதற்காகவே நம்பர்களை மறைத்து கொடுக்கிறேன். நான் கொடுத்த அனைத்து வாகனங்களும் இன்னும் சரியாக இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. நான் யாரிடமும் உதவிக்கு பணம் கேட்கவில்லை.

என் சம்பாதிப்பிலிருந்தே இது எல்லாம் முடிகிறது” என்று தெரிவித்தார். அவரது நேர்மையான விளக்கம் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருவதால், அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.