சிங்கம் என்றால் காட்டின் அரசன், யாரும் எதிர்க்க முடியாத ஆணவத்தின் நாயகன் என்று நம்பப்படுகிறது. அதன் பார்வைக்கே பிற உயிர்கள் பீதி அடைந்து ஓடிச் செல்லும். ஆனால், சில விலங்குகள் மட்டும் இந்த காட்டின் அரசனைக் கூட நிமிர்ந்து எதிர்க்கும் திறன் கொண்டவை. அந்த வகையில், காண்டாமிருகம், சிங்கத்திற்கு பயம் காட்டும் விலங்குகளாகவே பார்க்கப்படுகின்றன. சமீபத்தில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய வீடியோ ஒன்று, இந்த உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது.

 

வீடியோவில், பெண் சிங்கம் அமைதியாக அமர, அதற்கு முன்னால் ஆண் சிங்கம் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், மூன்று காண்டாமிருகங்கள் எதிரில் நின்று கொண்டிருப்பது தெரிகிறது. சிங்கம் தனது சக்தியை காட்டவே காண்டாமிருகங்கள் அருகே மெதுவாக நகர்ந்து செல்வதுபோல் காணப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, காண்டாமிருகங்கள் பயப்படவில்லை. அவை மாற்றாக சிங்கத்தை நோக்கி நகரத் தொடங்க, தனியாக இருந்த அந்த சிங்கம் பயந்து ஓடிவிட்டது. இந்த காட்சி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை @VideosVuvu என்ற பயனாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 34 விநாடிகளுக்குள் நடந்த இந்த காமெடி சம்பவம் தற்போது 1.2 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகளைத் தாண்டியுள்ளது. பலர் “இன்று காட்டின் அரசன் காண்டாமிருகங்கள் முன்னிலையில் கைகட்டிப் போனான்”, “இனிமேல் சிங்கம் காண்டாமிருகங்களுடன் வாக்குவாதம் செய்யும் முன் இரண்டு முறை யோசிக்கும்” என வெட்கமான ராஜாவின் மீம்ஸ் போட்டு ரசித்து வருகின்றனர்.