தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் திடீரென உடல்நலக் குறைபாட்டால் நேற்று இரவு காலமானார். அவரது மரணச் செய்தி திரை உலகத்தை மட்டுமல்ல, ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடல் சென்னையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், நடிகரும், நண்பரான நாஞ்சில் விஜயன், ரோபோ சங்கரின் அஞ்சலி புகைப்படங்களை பார்த்ததும், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் கண்கலங்கினார். “என் நண்பன், என் சகோதரனைப் போல பழகியவன் இப்போது நம்முடன் இல்லை என்பதையே நம்ப முடியவில்லை” என உருக்கமாக கூறிய நாஞ்சில் விஜயன், குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
ரோபோ சங்கரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து கண்கலங்கி நின்ற நாஞ்சில் விஜயன்#NanjilVijayan #RoboShankar | #RoboShankarRIP pic.twitter.com/IXQZxkLgxP
— PttvOnlinenews (@PttvNewsX) September 19, 2025
“>
திரையுலகில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரோபோ சங்கரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.
