கர்நாடக மாநிலமான ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் யோகா பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை 2019 ஆம் வருடத்தில் இருந்து நிரஞ்சனாமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவர் யோகா சங்கத்தின் செயலாளராகவும் பதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில் 2021 ஆம் வருடம் சிறுமி ஒருவர் பயிற்சிக்காக சேர்ந்தார். அதாவது 2023 ஆம் வருடம் தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் கலந்துகொள்ள அச்சிறுமியை நிரஞ்சனாமூர்த்தி அழைத்து சென்றிருந்தார்.

இந்நிலையில் தாய்லாந்தில் வைத்து நிரஞ்சனாமூர்த்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுமி மையத்திற்கு செல்வதை திடீரென நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த வருடம் வேறொரு மையத்தில் சிறுமி யோகா பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.‌ அதையும் நிரஞ்சனாமூர்த்தி தான் நடத்தி வந்தார் என்பது சிறுமிக்கு தெரியாமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நடக்கயிருக்கும் போட்டியில் உன்னை பங்கேற்க வைத்து பதக்கம் வாங்கி தருகிறேன் என்று நிரஞ்சனாமூர்த்தி சிறுமியிடம் தெரிவித்தார். மேலும் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை நிரஞ்சனாமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர். இவ்வாறு ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.