திருச்சி அமலாபுரம் காலணியில் வசித்து வருபவர் தான் தமிழ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதியன்று கல்லூரி மாணவி ஒருவரை பேராசிரியர் தனது அறைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மாணவி கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் தெரிவித்தும் அவர்கள் உரிய விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது.

அதன்பின் மாணவி தன் பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேராசிரியர் தமிழை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைச்சாலையில் அடைத்தனர். இவ்வாறு கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.