கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியில் வசித்து வருபவர்தான் என்ஜினியர் வினுகுமார். இந்நிலையில் செல்போனில் டேட்டிங் செயலி வாயிலாக சில நபர்கள் வினுகுமாருக்கு தொடர்புகொண்டு பேசினர். அந்த நபர்கள் நாம் நேரில் சந்திக்கலாம் என வினுகுமாரை குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்படி குறிப்பிட்ட இடத்திற்கு வினுகுமார் சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேர் வினுகுமாரை சரமாரியாக தாக்கியதோடு செல்போனை பறித்து, பணம் கேட்டு மிரட்டினர்.

இதன் காரணமாக அச்சமடைந்த வினுகுமார் தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை மட்டும் அந்த நபர்களிடம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் வினுகுமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது வினுகுமாரை மோசடி செய்தது பள்ளியாடியை சேர்ந்த சாலமன் பிரபு, வென்டார்வின் மற்றும் மற்றொருவர் என தெரியவந்தது. தற்போது தலைமுறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு டேட்டிங் மூலம் என்ஜினியரை வரவழைத்து பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.